கெம்பேகவுடா ஜெயந்தி விழா கொண்டாட்டம் - முதல்மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார்

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று கெம்பேகவுடா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கெம்பேகவுடா ஜெயந்தி விழா கொண்டாட்டம் - முதல்மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார்
Published on

பெங்களூரு,

பெங்களூரு நகரை வடிவமைத்தவர் கெம்பேகவுடா. இவருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கெம்பேகவுடா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்பட்ட கெம்பேகவுடா ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றியும், கெம்பேகவுடாவின் சிலைக்கு மாலை அணிவித்தும் விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக் குமார், கன்னடா மற்றும் கலாசாரத்துறை துறை மந்திரி ஜெயமாலா, பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், நிர்மலானந்தா சாமி, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கர்நாடக ஒக்கலிக்கர் சங்கத்தின் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தியையொட்டி மேள, தாளங்கள் முழங்க கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கெம்பேகவுடாவின் சிலை பெங்களூரு சுதந்திர பூங்காவில் இருந்து ஊர்வலமாக அரண்மனை மைதானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதேபோல் கெம்பேகவுடாவின் சொந்த கிராமமான ஹூட்டுராத தேவனஹள்ளி கிராமத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கெம்பேகவுடாவின் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com