கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் கேரள கவர்னர்-கலெக்டர் மலர் அஞ்சலி

காந்தி நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் கேரள கவர்னர் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் கேரள கவர்னர்-கலெக்டர் மலர் அஞ்சலி
Published on

கன்னியாகுமரி,

நாடு முழுவதும் நேற்று காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டம் (நினைவிடம்) முன்பு காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் காந்தி படம் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தனது குடும்பத்துடன் பங்கேற்று காந்தியின் அஸ்தி கட்டத்தின் மீது மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு கேரள கவர்னர் அங்கு சர்வோதய சங்க பெண்கள் ராட்டையில் நூல் நூற்பதை பார்வையிட்டார். முன்னதாக தமிழக அரசு மற்றும் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ், இளநிலை உதவியாளர் சந்திரகுமார், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராஹிம், கன்னியாகுமரி கிராம நிர்வாக அதிகாரி சுதன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் தம்பித்தங்கம், கன்னியாகுமரி நகர தி.மு.க.செயலாளர் குமரி ஸ்டீபன், ஒன்றிய தி.மு.க. இனைஞர் அணி துணை அமைப்பாளர் கெய்சர்கான், ஒன்றிய பிரதிநிதி எம். எச்.நிசார், தி.மு.க. நிர்வாகிகள் கோபி ராஜன், அழகன் கெய்சர், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், கன்னியாகுமரி நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி, ஜேம்ஸ், அகமது உசேன் உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் காந்தி நினைவு நாளையொட்டி குமரி மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com