கேரளா, குடகுக்கு தலா ரூ.1 கோடி மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார் மத்திய மந்திரி அனந்தகுமார்

கேரளா, குடகுக்கு தலா ரூ.1 கோடி மருந்து பொருட்களை மத்திய மந்திரி அனந்தகுமார் அனுப்பி வைத்தார்.
கேரளா, குடகுக்கு தலா ரூ.1 கோடி மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார் மத்திய மந்திரி அனந்தகுமார்
Published on

பெங்களூரு,

கேரளா மற்றும் கர்நாடகத்தில் உள்ள குடகு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் கேரளா மற்றும் குடகு ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் நேற்று பெங்களூருவில் இருந்து அனுப்பப்பட்டன. இதை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் அனுப்பி வைத்தார்.

இதில் பெண்களுக்கு தேவையான நாப்கின்கள் உள்பட 102 வகையான மருந்து பொருட்கள் இடம் பெற்றுள்ளன. அப்போது மத்திய மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தை ஒரே நாளில் சீரமைக்க சாத்தியம் இல்லை. தற்போதைக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் முடிந்த பிறகு நிபுணர்களின் அறிக்கையை பெற்று, கேரளா மற்றும் குடகு மாவட்டத்தை சீரமைக்கும் பணிகளுக்கு மத்திய அரசு உதவி புரியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com