

இந்தநிலையில் கிஷோர் கே.சுவாமி தனக்கு ஜாமீன் கோரி தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கிஷோர் கே.சுவாமி தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் கிஷோர் கே.சுவாமி மீது 2018 முதல் 2021 வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெண்களை அவதூறாக விமர்சித்து இருக்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் அவதூறாக விமர்சித்திருக்கிறார். மேலும் ஜூன் 26-ந் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது ஜாமீன் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சகானா, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பரப்பியதால் கிஷோர் கே.சுவாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.