குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரையூர் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

பேரையூர்,

பேரையூர் பி.ஆண்டிபட்டி கண்மாய் சாலை, ஏ.பாறைபட்டி விலக்கு சின்னசிட்டுலொட்டிபட்டி சாலை, மங்கம்மாள்பட்டி-வி.சத்திரப்பட்டி சாலை ஆகிய ஊராட்சி ஒன்றிய சாலைகள் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் இந்த சாலைகள் தொடர்ந்து பராமப்பின்றி போனதால் தற்போது குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலைகளில் வழியாக தான் இந்த பகுதி கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டிக்கு நடந்தும், வானங்களிலும் சென்று வருகின்றனர். மேலும் பலமுறை கோரிக்கை வைத்தும் பஸ்போக்குவரத்தும் பெறப்பட்டது. இந்தநிலையில் இந்த சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளதால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்கள் பயணம் செய்ய சிரமமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- நகரங்களில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலை வசதி நன்றாக இருந்தால் தான் கிராமம் வளர்ச்சி அடையும். கிராமத்தில் விளையும் பொருட்கள் நகரத்திற்கு வரவேண்டும் என்றால் சாலை வசதி அவசியம். அதை செய்து கொடுப்பது அரசின் கடமையாகும்.

இந்த சாலைகளின் நிலைமை குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை புகார் செய்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றாடம் அவதிப்படும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த சாலைகளை சீரமைத்தும், புதியதாக சாலைகள் அமைத்தும் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com