கிருஷ்ணகிரி அணையின் அனைத்து மதகுகளையும் மாற்றிடவேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் அனைத்து மதகுகளையும் மாற்றிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் அனைத்து மதகுகளையும் மாற்றிடவேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் அசோக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், நர்சரி சங்க தலைவர் கோகுல், மாவட்ட நிர்வாகிகள் குப்பையன், ருத்ரமூர்த்தி, தணிகாசலம், நாகராஜ், ராஜன், சின்னசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார்.

நீர்பாசன முடிவுகள் குறித்து விழுப்புரம் செயற்பொறியாளர் காலம் கடந்தும் முடிவுகள் எடுக்காமல் இருக்கிறார். இதனால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு தர்மபுரிக்கும், கிருஷ்ணகிரிக்கும் பொதுப்பணித்துறைக்கு நிரந்தர செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும்.

இதே போல் கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். பழுதடைந்த கிருஷ்ணகிரி அணை மதகு மற்றும் அனைத்து மதகுகளையும் அடுத்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு 4 மாத இடைவெளி உள்ள இந்த நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டும். விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை அரசு 15 நாட்களுக்குள் ஏற்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் கதிரியப்பன், தேவராஜ், ராஜ்குமார், அமாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com