சின்னதம்பி யானையை பிடிக்க முதுமலையில் இருந்து கோவைக்கு கும்கி யானை லாரியில் பயணம்

சின்னதம்பி யானையை பிடிக்க முதுமலையில் இருந்து கோவைக்கு லாரியில் கும்கி யானை கொண்டு செல்லப்பட்டது.
சின்னதம்பி யானையை பிடிக்க முதுமலையில் இருந்து கோவைக்கு கும்கி யானை லாரியில் பயணம்
Published on

மசினகுடி,

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. விநாயகன், சின்னதம்பி ஆகிய 2 காட்டுயானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. மேலும் அவை பொதுமக்களையும, வனத்துறை ஊழியர்களையும் தாக்கி உள்ளன.

எனவே அந்த காட்டுயானைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முதற்கட்டமாக விநாயகன் யானை கடந்த மாதம் 18-ந் தேதி அதிகாலையில் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த காட்டுயானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தபட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வனப்பகுதியில் 19-ந் தேதி அதிகாலையில் விடப்பட்டது. ரேடியோ காலர் உதவியுடன் தொடர்ந்து அந்த யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் மற்றொரு காட்டுயானை சின்னதம்பியை பிடிக்க கோவை வனத்துறையினர் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முதுமலை தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து முதுமலை(வயது 55) என்ற கும்கி யானை லாரியில் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கும்கி யானை உதவியுடன் சின்னதம்பி காட்டுயானை பிடிக்கப்பட உள்ளது.

கோவைக்கு பயணமான கும்கி யானையுடன் முதுமலை வனவர் முத்துராமலிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர்கள், காட்டுயானையை பிடிப்பதில் அனுபவம் வாய்ந்த பாகன்கள் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com