குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது. இதனை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்
Published on

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள், தங்களது விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில் மக்காச்சோளத்தை படைப்புழு தாக்கியுள்ளது. மகசூல் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இது பற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் குறிஞ்சிப்பாடி பகுதியில் படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் ஒருங்கிணைந்த முறையில் மக்காசோள பயிரில் படைப்புழு கட்டுபடுத்துதல் குறித்து விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கி பேசுகையில், படைப்புழுக்களை கட்டுப்படுத்த விளக்கு பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகளை மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மத்திய பயிர் பாதுகாப்பு துறை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் பேசுகையில், படைப்புழுவை கட்டுப்படுத்த நுண்ணுயிர் பூச்சி கொல்லிகள், ஒட்டுண்ணிகள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேளாண் துறையும், தழிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் ஏற்பாடு செய்யும் என்றார். பூச்சியியல் துறை தலைவர் டாக்டர் சாத்தையா, படைப்புழுவின் முழு வாழ்க்கை சுழற்சி முறை மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து பேசினார்.

படைப்புழு கட்டுப்பாடு மண்டல அலுவலர் டாக்டர் முத்துக்கிருஷ்ணண் கலந்து கொண்டு பேசுகையில், ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் விதைக்க வேண்டும். ஊடு பயிர்களை பயிரிட வேண்டும் என்றார். கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இந்திராகாந்தி, வேளாண்மை அலுவலர் சினேகப்பிரியா, வேளாண்மை துணை அலுவலர் ராஜக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துராமன், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com