

ஆவடி,
திருநின்றவூரை அடுத்த பாக்கம் வினோபா நகரை சேர்ந்தவர் பிரேமா (வயது 32). சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பெரியபாளையம் சாலை மேலப்பேடு அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரேமா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.