லதா மங்கேஷ்கர் விருது உஷா மங்கேஷ்கருக்கு வழங்கப்படுகிறது மராட்டிய அரசு அறிவிப்பு

லதா மங்கேஷ்கர் விருது அவரது சகோதரி உஷா மங்கேஷ்கருக்கு வழங்கப்படுவதாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.
லதா மங்கேஷ்கர் விருது உஷா மங்கேஷ்கருக்கு வழங்கப்படுகிறது மராட்டிய அரசு அறிவிப்பு
Published on

மும்பை,

மராட்டிய அரசு சார்பில் பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. லதா மங்கேஷ்கர் விருது பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான லதா மங்கேஷ்கர் விருது அவரது சகோதரி உஷா மங்கேஷ்கருக்கு (வயது84) வழங்கப்பட உள்ளது. இந்த முடிவை மாநில கலாச்சார துறை மந்திரி அமித் தேஷ்முக் தலைமையிலான கமிட்டி எடுத்து உள்ளது. மேலும் லதா மங்கேஷ்கரின் 91-வது பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் லதா மங்கேஷ்கர் விருதை பாடகி ஆஷா போஸ்லே, சுமன் கல்யாண்புர், இசையமைப்பாளர் ராம்-லெட்சுமண், உத்தம் சிங், உஷா கன்னா ஆகியோர் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் அனில் தேஷ்முக், ஏக்னாத் ஷிண்டே, நவாப் மாலிக், நிதின் ராவத், சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com