தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கட்டும்: பொற்கால ஆட்சி தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்; அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார்.
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கட்டும்: பொற்கால ஆட்சி தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்; அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
Published on

அவர் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து பூ தூவி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் பெண்கள் திரண்டு நின்று எங்கள் ஓட்டு உங்களுக்கே, இரட்டை இலைக்கே என்று உற்சாக ஆரவாரம் எழுப்பி வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று காளவாசல், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. அதோடு வளர்ச்சியும் விண்ணைத்தொட்டு கொண்டு இருக்கிறது. பல மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அதற்கு காரணம் ஜெயலலிதாவின் தொலை நோக்கு திட்டங்களை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருவது தான். ஜெயலலிதா கூறியப்படி மக்களால் நான்..! மக்களுக்காகவே நான் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு மக்களின் தேவையறிந்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

நான் அமைச்சராக உள்ள கூட்டுறவு துறையும் தற்போது சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கொரோனா காரணமாக கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்று இருந்த கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக கூட்டுறவு துறை சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் விருதுகள் பெற்றுள்ளன.

கொரோனா காலத்தில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது. ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட் கள் வழங்கப்பட்டன. அம்மா உணவங்களில் இலவச உணவு பறிமாறப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை பேணி காக்க அதிகளவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு கடன் வழங்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறேன். கிராம மக்களுக்கு அரசுத் திட்டங்கள் தடையின்றி செல்ல, என்னுடைய துறையில் சிறப்பாகப் பணியாற்றி அப்பழுக்கற்றவனாக இருக்கிறேன். அ.தி.மு.க. அரசின் சாதனை

இமாலயம் போன்றது. ஒரு நாள் முழுக்க சொல்லும் அளவுக்கு சாதனைகள் செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் அரசுத்திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் மக்களை சென்றடைந்துள்ளது. உங்களுக்கு நான் செருப்பாக இருந்து உழைப்பேன். மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த தொகுதிமக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன். கடந்த 10 ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்தபோதும் மதுரையில் யாருக்கும் ஒரு தொந்தரவும் செய்தது கிடையாது. நான் என்னை அமைச்சராக நினைத்து பார்த்தது கிடையாது. நான் முதன்மையான மக்கள் சேவகன். உங்கள் வீட்டு பிள்ளை. கோடிக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களில் நான் ஒருவன். இப்போது என்னை பெற்ற தாயும் இல்லை. என்னை பொதுவாழ்வில் வளர்த்த

தாயும் (ஜெயலலிதா) இல்லை. என்னைக் காப்பாற்றும் தாய் நீங்கள்தான். உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு முழு ஆதரவு தர வேண்டும். பொற்கால ஆட்சி தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com