செய்யூர், மதுராந்தகம் தொகுதி வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா

செய்யூர், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் இணையசேவை வழங்கப்பட்டுள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி செய்யூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செய்யூர், மதுராந்தகம் தொகுதி வாக்குஎந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தர்ணா
Published on

உத்திரமேரூர்,

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் செய்யூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் பாபு வழக்கம் போல் நேற்று ஆய்வுக்கு சென்றார்.

அப்போது அங்கு திடீரென தரையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறும்போது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வை-பை எனப்படும் இணைய சேவை வழங்கப்பட்டதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com