

திருப்பத்தூர்,
மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து திருப்பத்தூர் எல்.ஐ.சி. கிளை சார்பில் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் என்.பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஞானமணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை கிளை மேலாளர் டி.விஜயேந்திரன் தொடங்கி வைத்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சி.செல்வம், நகர தொழிற்சங்க கூட்டமைப்பு ஜோதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். இதில் முகவர் சங்கம் அட்சயா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.மூர்த்தி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி ஒரு மணி நேரம் எல்.ஐ.சி. அலுவலக கதவுகள் மூடப்பட்டது. இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் வெளியே காத்திருந்தனர்.