

பொன்னமராவதி, ஜூன்.8-
பொன்னமராவதி அருகே வலையப்பட்டி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வலையப்பட்டி மலையாண்டி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரில் இருந்த 40 மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த சுரேஷ் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.