

திருச்சி, ஜன.29-
திருச்சி ரெயில்வே பாதுகாப்புபடை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 7.50 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்து வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கி ஆசாமி ஒருவன், போலீசாரை கண்டதும் முதலாவது பிளாட்பாரத்தின் பார்சல் ஆபீஸ் அருகில் 2 வெள்ளை நிற சாக்குப்பை மற்றும் ஒரு பையை போட்டு விட்டு நைசாக நழுவி விட்டான். போலீசார் சந்தேகப்பட்டு அந்த 3 பைகளையும் பார்க்கையில் அதில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 75 எண்ணங்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்களின் புதுச்சேரி மதிப்பு ரூ.12,379 ஆகும். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆசாமி குறித்து நடைமேடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.