

மதுரை,
திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து அவர் மாலை 5.30 மணி அளவில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி விடுமுறைதான். மார்ச் 16-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தினம் மூத்த அமைச்சர்கள், வருவாய்த்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து இருக்கிறோம். அது குறித்த விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.