சுங்குவார்சத்திரம் அருகே சிவன் கோவிலில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு தடயங்களை மறைக்க தீ வைத்து எரிப்பு

சுங்குவார்சத்திரம் அருகே சிவன் கோவிலில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு போனது. தடயங்களை மறைக்க தீ வைத்து எரித்துள்ளனர்.
சுங்குவார்சத்திரம் அருகே சிவன் கோவிலில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு தடயங்களை மறைக்க தீ வைத்து எரிப்பு
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

சுங்குவார்சத்திரத்தை அடுத்த எடையார்க்கம் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கோவில் அர்ச்சகர் நாரயணசாமி சென்றபோது கோவிலுக்கான பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது. யாரோ மர்ம நபர்கள் சிலர் கோவில் உள்ளே இருந்த ரூ.2 லட்சம் வெள்ளி, பித்தளை பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் தடயங்களை மறைக்க அங்கிருந்த சாமிக்கு பயன்படுத்தும் பட்டு துணிகள் மற்றும் பூஜை பொருட்கள் வைத்திருந்த பீரோவை தீ வைத்து எரித்துள்ளனர். தீ கோவில் முழுவதும் பரவியதால் கோவில் சுவர்கள் விரிசல் விழுந்தது. கோவிலில் இது போன்று 2 முறை திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த கோவிலை சுற்றி இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com