வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம் அனைத்து மீனவ கிராம நிர்வாகிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து இலங்கை தென்வடக்கு மற்றும் தென்பகுதியிலும், தமிழ்நாட்டு கடற்கரை பகுதியிலும் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

செல்ல வேண்டாம்

எனவே மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு அனைத்து மீனவ கிராமங்களிலும் ஆலயத்திலும், மீன்பிடி இறங்கு தளம், ஏலக்கூடம், அறிவிப்பு பலகைகளில் அறிவிப்பு செய்யவும், மீனவர்கள் வானிலை எச்சரிக்கையை தவறாமல் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com