

மதுரை,
மதுரை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் விவரத்தை குடியுரிமைப்பிரிவு இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் விவரம் தவறாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் அவர், திருச்சி ஆர்.எம்.எஸ்.காலனி, கருமண்டபத்தை சேர்ந்த வீரகுமார் (வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், வீர குமாரின் ஆதார் கார்டு போலி என்பதும், இன்னொருவரின் பாஸ்போர்ட்டில் விமானத்தில் பயணம் செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை விமான நிலைய அதிகாரி விக்டர் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து வீர குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.