மகா புஷ்கர ஓராண்டு நிறைவையொட்டி காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து தீபாராதனை

மகா புஷ்கர ஓராண்டு நிறைவையொட்டி காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து தீபாராதனை செய்யப்பட்டது.
மகா புஷ்கர ஓராண்டு நிறைவையொட்டி காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து தீபாராதனை
Published on

ஸ்ரீரங்கம்,

குருபகவான் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் இடம் பெயர்வது புஷ்கர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஓராண்டு நிறைவு விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயகப்பெருமாள், தாயாரை எழுந்தருள செய்தனர்.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு லட்சுமி நாராயண யாகம், ஸ்ரீயாகம், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி நடைபெற்றது.

ஆரத்தியை முன்னிட்டு படித்துறையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காவிரி தாயாருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். தொடர்ந்து யாகசாலை திடலில் மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்க மாஹாத்மியம், காவிரி மாஹத்மியம் உபன்யாசங்கள் நடைபெற்றது.

யாகசாலையில் தினமும் பல்வேறு பூஜைகள். ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வேதவிற்பன்னர்கள், துறவிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழா 24-ந் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com