பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
Published on

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (29.1.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்த்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திர நகர், குலபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர்.

வடபெரும்பாக்கம்: கன்னியம்மன் நகர், வேதாசலம் நகர், செல்லியம்மன் நகர், சபரி நகர், சாம்வேல் நகர், பெருமாள் கோவில் தெரு, பாலாஜி நகர், லூர்து கார்டன், தணிகாசலம் நகர், திருமலை நகர், கிஸ்டம்மாள் நகர் மற்றும் கே.வி.டி. டவுன்ஷிப் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com