மக்காச்சோளம் விளைச்சல் அமோகம்

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் அமோக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மக்காச்சோளம் விளைச்சல் அமோகம்
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் விளைச்சல் அமோக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மக்காச்சோள சாகுபடி

ஆலங்குளம் அருகே உள்ள தொம்பகுளம், ஆர்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் கோடைகால பயிரான மக்காசோளம் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் கிணற்று பாசனம் மூலம் நல்ல தண்ணீர் உள்ள கிணற்றை நம்பிதான் மக்காச்சோளம் சாகுபடி செய்ய முடியும்.

இந்தநிலையில் கோடைமழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தால் மக்காச்சோள பயிருக்கு தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைத்தது.

யூரியா உரம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளோம். பெரும்பாலும் கிணற்று நீரை நம்பி தான் சாகுபடி செய்வோம்.

தற்போது கோடைமழை தெடர்ச்சியாக பெய்தததால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை மேற்கொண்டு உள்ளோம். யூரியா போன்ற உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதனால் 90 நாளில் நன்றாக விளைந்து கதிர் வாங்கக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். மக்காச்சோளம் விளைச்சல் அமோக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com