காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கர் மக்காச்சோளம் நாசம்

சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன.
காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கர் மக்காச்சோளம் நாசம்
Published on

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன.

200 ஏக்கர் நாசம்

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இதில் சுமார் 50 பேர் 200 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். கடந்த 105 நாட்களாக போதிய உரம், தண்ணீர் ஆகியவை விட்டு மக்காச்சோள பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த கிராமத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளங்களை கடித்து தின்று நாசப்படுத்தி விட்டு சென்றுள்ளது.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் விவசாய வேலைக்கு வந்த பெண்கள் காட்டு பன்றிகளின் அட்டகாசம் குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு இல்லை

இதுகுறித்து விவசாயி கணேசன் கூறியதாவது:-

போதிய வசதி இல்லாத நிலையிலும் நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 105 நாட்களாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த மக்காச்சோளங்களை பாதுகாத்து வளர்த்து வந்தோம். இன்னும் 60 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தற்போது காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் மக்காச்சோள பயிர்கள் நாசமாகி உள்ளது.

மேலும் விவசாய பணிக்கு வரும் பெண்களும் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். விவசாய பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். வனத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு நேரில் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எங்களை பீதியில் ஆழ்த்தியுள்ள காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com