கடிகாரத்துடன் புகார் அளித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கையில் கடிகாரங்களுடன் வந்து புகார் மனு அளித்தனர்.
கடிகாரத்துடன் புகார் அளித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்
Published on

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ரேஷன் கார்டு, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் மக்களுக்கு கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையை மாற்றி நிறைவான, தரமான அரசு சேவை பெறுவதற்கு வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர மக்கள் நீதி மையத்தின் சார்பாக போராடி வருகிறோம். அரசுத்துறைகள் காலம் தாழ்த்தாமல் சேவை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக கையில் கடிகாரத்துடன் வந்து கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com