ஆண் எனக்கூறி 3 பெண்களை திருமணம் செய்த இளம்பெண் கைது

ஆண் எனக்கூறி, 3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஆண் எனக்கூறி 3 பெண்களை திருமணம் செய்த இளம்பெண் கைது
Published on

திருப்பதி,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், தன்னை ஆண் எனக்கூறி வந்தார். ஆண்களை போல் வேடமிட்டு வலம் வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் 3 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

முதலில் அனந்தபுரம் மாவட்டம் கொத்தச்செருவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 3-வதாக ஜம்மலமடுகு பகுதியில் உள்ள பீமகுண்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், எனக்கு அவசர வேலைகள் உள்ளது. விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்துச் செல்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் எனக்கூறி செல்லும் அவர், பின்னர் திரும்பி வருவதே இல்லை எனத் தெரிகிறது. திருமணம் செய்தவரை பற்றி விசாரித்தவர்கள், தங்களை திருமணம் செய்தவர் ஆண்அல்ல இளம்பெண் என்பதும், அவர் சென்னையில் வேலை பார்த்து வருவதையும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த ஜம்மலமடுகு பெண், போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கடப்பா மாவட்ட போலீசார் சென்னைக்கு வந்து, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆண் என்று கூறி 3 பேரை திருமணம் செய்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் கடப்பா மாவட்டம் மற்றும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com