மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

மாமல்லபுரத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் எப்போதும் இல்லாத வகையில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
Published on

மாமல்லபுரம்,

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது மாமல்லபுரம். இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டுபயணிகள் கடற்கரை மணல் பரப்பில் பொழுதை போக்குவர். கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு. நேற்றும், நேற்று முன்தினமும் எப்போதும் இல்லாத வகையில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பின. கடல் நீர் கரைப்பகுதி வரை உட்புகுந்து குளம்போல் தேங்கி நின்றது.

மாமல்லபுரம் மீனவர் பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ராட்சத அலையில் சிக்கி மிதந்து கொண்டிருந்தன. அலையில் அடித்து செல்லாமல் இருக்க மீன்பிடி வலைகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com