உலக கடல் பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை காண பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் துறை சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள மலைக்குன்றில் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.
உலக கடல் பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை காண பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி
Published on

மாமல்லபுரம்,

உலக கடல்வழி பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு நேற்று அரசு பள்ளி மாணவர் களுக்கு மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டது. மாணவர்கள் பலர் ஆர்வமாக கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்த்தனர்.

மேலும் கலங்கரை விளக்க அலுவலர் வசந்த், பள்ளி மாணவர்களுக்கு தற்போது நவீன தொழில் நுட்பத்தில் தானியங்கி மூலம் செயல்படும் கலங்கரை விளக்கத்தின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார்.

மேலும் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட மண்எண்ணெய் விளக்கு, அப்போது பயன்படுத்தப்பட்ட சுழலும் விளக்கு மற்றும் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த சாதனங்களை மாணவர்களுக்கு காண்பித்து விளக்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com