

மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னார்குடி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மன்னார்குடி அருகே உள்ள உடையார்மானியம் அருகே உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஒரு வாலிபர் திடீரென ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி வாலிபரின் உடலை தேடினார். அப்போது ரயில் தண்டவாளத்தில் நசுங்கிய நிலையில் கிடந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வாலிபர் மன்னார்குடியை அடுத்த உடையார்மானியம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த ரயில் 15 நிமிடம் காலதாமதமாக நீடாமங்கலம் சென்றடைந்தது