‘மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
‘மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை’ அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
Published on

திருப்புவனம்,

திருப்புவனத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:- மானாமதுரை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது. 2019 ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை மாற்றப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேசினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ராஜேந்திரன், திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் அழகுமலை, மடப்புரம் காலனி கிளை செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல இளையான்குடியில் நடந்த கூட்டத்திற்கு இளையான்குடி நகரகுடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மானாமதுரை இடைத்தேர்தலுக்காக பல வியூகங்கள் அமைத்து உள்ளோம். தொகுதி பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர். முதல் கட்டமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம், தமிழகத்திலேயே மானாமதுரை சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன், நகர செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் ரத்தினம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com