கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாய பரிசோதனை

தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாய பரிசோதனை
Published on

களியக்காவிளை,

தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய-மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 28 பேர் பலியானார்கள். அதே சமயத்தில் குமரியில் குறைந்திருந்த பாதிப்பு, சற்று உயர்ந்துள்ளது. 22 வரை வந்த பாதிப்பு மீண்டும் 40-க்கு சென்றுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகரிப்பு

குமரி எல்லையை ஒட்டி உள்ள கேரளாவில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 22 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அங்கு கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 585 ஆக உள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உயர்ந்து கொண்டே செல்கிறது. தேசிய அளவில் தினசரி பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் போது, கேரளாவில் 12.93 சதவீதமாக உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், குமரி எல்லை பகுதியிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது குமரியில் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு, கேரளாவை சேர்ந்தவர்கள் இங்கு வருவதால் தான் என்ற கருத்து நிலவுகிறது.

நடவடிக்கை

ஏற்கனவே கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்களில் குமரிக்கு வரும் பயணிகளுக்கு சோதனை சான்றிதழ் இல்லை என்றால், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொண்ட பின்பு தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்கு எவ்வித சோதனையும் மேற்கொள்ளாமல் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவுக்கு சென்று குமரி மாவட்டம் திரும்புவதால், குமரியில் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களிடம் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை பகுதியை மூடவும் வலியுறுத்தி உள்ளனர்.

கண்காணிப்பு

சோதனை சாவடி தவிர கேரளாவில் இ்ருந்து வருபவர்கள் வேறு எந்த பகுதிகள் வழியாக குமரி மாவட்டத்துக்குள் நுழைகிறார்கள் என்பதை அறிந்து, அங்கும் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com