மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மகளுடன் சேர்ந்து வாக்கு சேகரித்த தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன்

தன்மகள் நீவானிகதிரவன் உடன் சேர்ந்து மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மகளுடன் சேர்ந்து வாக்கு சேகரித்த தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன்
Published on

திருச்சி,

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட் பாளர் கதிரவன் கடந்த சில நாட்களாக தீவிர பிரச் சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தன் மகள் நீவானிகதிரவன் உடன் சேர்ந்து மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் அப்பகுதி பொது மக்களும் கட்சி நிர்வாகி களும் அவருக்கு மலர்கள்தூவி ஆரத்தி எடுத்து உற் சாகமான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின்போது வேட்பாளரின் மகள் நீவானி கதிரவன் பொதுமக்க ளிடையே பேசியதாவது.

எங்களுக்கு சொந்தமாக பெரம்பலூர் மற்றும் சமய புரத்தில் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் மண்ணச்ச நல்லூர் தொகுதி யில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக் கை எடுப்பார். இதற்காக தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு மருத் துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை கொண்டு எங்களது மருத்துவமனைகளில் இலவசமாக அனைத்து மருத்துவ சிகிச்சை களையும் பெறலாம்.

சாதாரண காய்யச்சல் முதல் அறுவைசிகிச்சை தேவைப்படும் சிகிச்சைகள் பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும். மேலும் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த் தப்படும். அதே போல அரசு பள்ளிகளும் தரம் உயர் த்த நடவடிக்கை எடுக்கப் படும். அதே போல கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 100 சத வீதம் முழுமையாக நிறைவேற்றி கொடுப்பார். மண் ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு சேவை ஆற்றவே எனது அப்பா தேர்தலில் போட்டியிடுகிறார். பணம் சம்பாதிக்க வேண்டிய நோக்கம் எங்க அப்பவுக்கு இல்லை ஏற்கனவே பல சேவைகளை செய்து வருகிறோம்.

மண்ணச்சநல்லூர் தொகுதியை தமிழ் நாட்டின் முன் மாதிரி தொகு தியாக மாற்றிக்காட்டுவார். தி.மு.க. ஆட்சி அமைத்து தமிழகத்திற்கான விடியல் பிறக்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் அப்பாவை பெருவாரியானயான வாக்கு வித்தியாசத் தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது தி.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் நிர் வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com