தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் வாக்கு சேகரிப்பு

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் நேற்று முதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை இல்லம் தேடி சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் வாக்கு சேகரிப்பு
Published on

மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பி.இளங்கோவன், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசன், முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மேலும் எதுமலை, சீதேவி மங்கலம், வாழையூர், மணியாங்குறிச்சி, மேலவங்காரம், கீழவங்காரம், ஆய்குடி, சிறுகனூர், சி.ஆர்.பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், பிச்சாண்டார் கோவில், கூத்தூர், கல்பாளையம், ஈச்சம் பட்டி, சமயபுரம், எஸ்.புதூர்ஆகிய இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் சிறுகனூர் மற்றும் பெரகம்பியில் மாற்று கட்சி யினர் 150க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com