நாகை கடற்கரையில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்

நாகை கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
நாகை கடற்கரையில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்
Published on

நாகப்பட்டினம்,

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நேற்று மாசி மகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கல்யாணசுந்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அஸ்திரதேவருடன் பல்லக்கில் எழுந்தருளி நாகை புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக சென்றார். பின்னர் கடற்கரையில் அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியம், அரிசிமாவு, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அஸ்திரதேவர் கடலில் இறங்கி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

அதேபோல் நாகை சவுந்தரராஜபெருமாள் கோவில், திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில், வெளிப்பாளையம் வரதராஜபெருமாள் கோவில், நாகை குமரன் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், கிருஷ்ணர் கோவில், ஆரியநாட்டுத்தெரு தாய்மூகாம்பிகை கோவில், பாப்பாகோவில் ரங்கநாத பெருமாள் கோவில், ஆவராணி பெருமாள் கோவில், பொரவச்சேரி, சிக்கல் உள்ளிட்ட பகுதி கோவில்களில் உள்ள சாமிகள் நேற்று நாகை கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெற்றது.

கீழையூர் ரங்கநாதபெருமாள் கோவிலில் இருந்து சாமி திருமணங்குடி, மேலப்பிடாகை, திருப்பூண்டி, காமேஸ்வரம் பகுதிகள் வழியாக காமேஸ்வரம் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com