மாசிமக தீர்த்தவாரி

திரவுபதி அம்மன் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே உள்ள குளத்தில் சாமி எழுந்தருளினர்.
மாசிமக தீர்த்தவாரி
Published on

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் காசிபாட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே உள்ள குளத்தில் சாமி எழுந்தருளினர். குளக்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் அஸ்திராயருடன், சிவாச்சாரியார்களும், சக்கரவர்த்தாழ்வாருடன் பட்டாச்சாரியார்களும் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி நடத்தினர்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை மலை மீது உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியசாமி மாசி மக தீர்த்தவாரிக்காக 5 கிலோ மீட்டர் தூரம் எடையாளம் கிராமத்திற்கு எழுந்தருளினார். அங்குள்ள ஆற்றில் சிவாச்சாரியார்கள் தீர்த்தவாரி நடத்தினர். பிறகு முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com