மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் சட்டவிரோத செயல்களை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சட்டவிரோத செயல் களை தடுக்க மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் சட்டவிரோத செயல்களை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை
Published on

சென்னை,

மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர், அழகு நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், பணியாளர்களுக்கு அடிப்படை கல்வி தகுதியை உறுதி செய்ய வேண்டும், இந்த மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும், வாடிக்கையாளர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்ய பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் முடிதிருத்தும் நிலையங்கள்(சலூன்), மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் கண்டிப்பாக தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தொழில் உரிமம் பெறாமல் ஏப்ரல் 1-ந் தேதி முதல் முடி திருத்தும் நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட முடியாது. இதுபோன்ற மையங்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க தொழில் உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு போலீஸ் விசாரணையும் நடத்தப்பட உள்ளது. கதவுகள் மூடப்பட்ட நிலையில் மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படக்கூடாது. மையங்கள் செயல்படும் நேரங் களில், கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வகையான பாலியல் தொடர்பான செயல்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. தொழில் உரிமம் பெற குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com