மாநில கபடி போட்டியில் வெற்றி: மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை அணிக்கு சிறப்பு கோப்பை

மாநில கபடி போட்டியில் வெற்றி: மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை அணிக்கு சிறப்பு கோப்பை.
மாநில கபடி போட்டியில் வெற்றி: மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை அணிக்கு சிறப்பு கோப்பை
Published on

மதுரை,

கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில், இறுதி போட்டியில், பத்மநாபபுரம் அழத்தங்கரை அணியும், மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அணியும் மோதின. இதில், பாதுகாப்பு படை போலீஸ் அணி 30 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்கு கிட்டத்தட்ட ஆளுயரம் கொண்ட சிறப்பு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு, போட்டியில் வென்ற கபடி அணியினரை நேற்று பாராட்டினார். மதுரையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு படை விளையாட்டு மேலாளரும், இன்ஸ்பெக்டருமான சிவக்குமார் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com