முன்னாள் கவுன்சிலர் குடும்பத்துக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ,1 லட்சம்

முன்னாள் கவுன்சிலர் குடும்பத்துக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ,1 லட்சம்
முன்னாள் கவுன்சிலர் குடும்பத்துக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ,1 லட்சம்
Published on

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 10&ந் தேதி தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம்அக்ரம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வீட்டிற்கு ம.தி.மு.க. முன்னாள் பொருளாளரும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி தலைமையிலான ம.தி.மு.க.வினர் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் நகர ம.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினர்.

பின்னர், கணேசமூர்த்தி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், சமூக சேவகர் வசீம் அக்ரம் படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இந்த வழக்கில் யார் பின்புலமாக இருந்தார்களோ அவர்கள் மீது ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது மாவட்ட செயலாளர் கண்ணதாசன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் சுப்பிரமணி, நகர செயலாளர் நாசீர்கான் உள்பட பலர் உடனிருந்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com