நினைவு தினம் அனுசரிப்பு: ராஜீவ்காந்தி சிலைக்கு தலைவர்கள் மரியாதை

ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நினைவு தினம் அனுசரிப்பு: ராஜீவ்காந்தி சிலைக்கு தலைவர்கள் மரியாதை
Published on

புதுச்சேரி,

ஆண்டு தோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாள் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி அரசு சார்பில், தட்டாஞ்சாவடியில் உள்ள அவரது சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உதவி இயக்குநர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் துணைத்தலைவர் பி.கே. தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொட்டலம், முக கவசம் வழங்கப்பட்டது.

பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட கட்சியினர், தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது சிகிச்சை முடிந்து டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு கலெக்டர் அர்ஜூன் சர்மா, திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ. சிவா, துணை கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், வீரவல்லபன் உள்பட பலர் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் புதிய பஸ் நிலையம், காரைக்கால்மேடு மதகடி, திருமலைராயன்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பஷீர், கிழக்கு வட்டார தலைவர் அரசன், மேற்கு வட்டார தலைவர் சுப்பையன், மாவட்ட செயலாளர் சிவகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com