தனியார் ஸ்கேன் மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி: பரிசோதனை மைய அறை மூடி வைப்பு

தனியார் ஸ்கேன் மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி என புகார் எழுந்ததால் கொரோனா பரிசோதனை அறையை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பூட்டி வைத்தனர்.
தனியார் ஸ்கேன் மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி: பரிசோதனை மைய அறை மூடி வைப்பு
Published on

பூந்தமல்லி,

சென்னை வடபழனி 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக அரசு சார்பில் கொரோனா பரிசோதனை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அங்கு கொரோனா பரிசோதனை செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லாமலேயே கொரோனா இருப்பதாக முடிவு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த குளறுபடி குறித்து பாதிக்கப்பட்ட அந்த நபர், பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தனியார் ஸ்கேன் மையத்துக்கு சென்ற பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தனர்.

அதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதும், ஆனால் அதில் முறையான தகவல்கள் மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஸ்கேன் மையத்தில் உள்ள கொரோனா பரிசோதனை அறையை மட்டும் பூட்டினர். இதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும் வரை கொரோனா பரிசோதனைகள் செய்யக்கூடாது. அந்த அறையையும் மூடி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com