மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு

பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு
Published on

இரவு 11 மணி வரை நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (திங்கட்கிழமை) முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

ரூ.35 ஆயிரம் அபராதம்

மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முககவசம் அணியாவிட்டாலோ அல்லது முககவசம் சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.அதன்படி கடந்த ஜூன் 21-ந்தேதியில் இருந்து கடந்த 21-ந்தேதி வரை முககவசம் அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்த 176 பயணிகளிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ ரெயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முககவசம் அணிந்திருப்பதுடன், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com