எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சி - 4 அமைச்சர்கள் பங்கேற்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சியில் 4 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சி - 4 அமைச்சர்கள் பங்கேற்பு
Published on

நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நிகழ்ச்சி நாகர்கோவிலில் இன்று நடக்கிறது. இதில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குமரி மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி விழா மேடை அமைப்பதற்கான கால்கோள் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதைதொடர்ந்து வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகின்றனர். பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com