மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் கடைபிடிப்பு

சேலம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் கடைபிடிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன்படி சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு சங்ககிரி ஒன்றிய, நகர, அ.தி.மு.க. கட்சியினர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு சங்ககிரி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் என்.சி. ஆர்.ரத்தினம் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ். மணி முன்னிலை வகித்தார். சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி சேகரன், சங்ககிரி ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் நீதிதேவன், தேவூர் நகர செயலாளர் குருசாமி, அரசிரா மணி நகர செயலாளர் சாமியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொங்கணாபுரம்

கொங்கணாபுரம் ஒன்றிய பேரூர் அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பேர்மன்னன், குமார், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்மா திட்டகுழு தலைவர் கரட்டூர் மணி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பஸ் நிலையம் எதிரில் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு அச்சக தலைவர் கந்தசாமி நிர்வாகிகள் உத்தர்ராஜ், நாராயணன், செங்கோடன், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பூலாம்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் காளியண்ணன், முன்னாள் பேரூராட்சி செயலாளர் சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஏத்தாப்பூர்

ஏத்தாப்பூரில், எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவருடைய உருவச்சிலைக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சின்னத்தம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ரமேஷ், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் நகர செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஆத்தூர் கடைவீதியில் உள்ள நகர அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து சின்னத்தம்பி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சாரதா ரவுண்டானா அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வந்தனர். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.. இதில் நகர செயலாளர் மோகன், கோட்டை சின்னசாமி, முரளிசாமி, ராஜேஸ்குமார், மகபூப்பாஷா, பூண்டு சுப்பிரமணி, சுந்தரமூர்த்தி மற்றும் ஏரளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

ஆத்தூர் நரசிங்கபுரத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பஸ் நிறுத்தம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு கிழக்கு மாவட்ட பேரவை செயலாள் காட்டு ராஜா, நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கண்ணன், பழக்கடை முருகன், லியாகத் அலி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com