நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவிலுக்கு சந்தனகுட ஊர்வலம்

நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவிலுக்கு சந்தனகுட ஊர்வலம் நடந்தது.
நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவிலுக்கு சந்தனகுட ஊர்வலம்
Published on

நாகர்கோவில்,

மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரையில் சிவசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 24ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை, ஆன்மிக உரை, சமய மாநாடு போன்றவை நடந்தது.

விழாவின் 9வது நாளன்று 2 யானைகள் மீது சந்தன குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கலில் இருந்து சிங்காரி மேளத்துடன் இரண்டு யானைகளுடன் சந்தனகுட ஊர்வலம் புறப்பட்டது. இதை நிழல்தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைத்தார்.

இதற்கு நிர்வாக தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், சிவராஜ், சடையன், நாகராஜன், இளைஞர் மன்ற முன்னாள் தலைவர் அய்யாத்துரை, விழாக்குழு உறுப்பினர் தர்மராஜ், ரமேஷ், சந்திரசேகர், சுந்தர், கிருஷ்ணதாஸ், சந்தான கிருஷ்ணன், இளைஞர் மன்ற தலைவர் நிகேஷ் மற்றும் சமுத்திர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்தனகுட ஊர்வலம் லெட்சமிபுரம், மவுனகுருசாமி கோவில், பருத்திவிளை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், மணலிவிளை, கோவிலான்விளை வழியாக நடுவூர்க்கரையில் உள்ள சிவசக்தி அம்மன் கோவிலை அடைந்தது. இதில் ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்று காலை திருநடை திறப்பு, கடலில் இருந்து புனித நீர் கொண்டு வந்து, சிவசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவமாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒடுக்கு பூஜை நடந்தது. வாணவேடிக்கையுடன் விழா நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com