கட்டாலங்குளம் உள்ளிட்ட 6 இடங்களில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

கயத்தாறு வட்டாரத்தில் கட்டாலங்குளம் உள்ளிட்ட 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கட்டாலங்குளம் உள்ளிட்ட 6 இடங்களில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
Published on

கயத்தாறு,

கயத்தாறு யூனியனை சேர்ந்த அய்யனார் ஊத்து கிராமத்தில் காலை 10 மணிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அம்மா மினிகிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றினார்.

இவ்விழாவில் 2 கர்ப்பிணிகளுக்கு அம்மா மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். இதேபோல் கயத்தாறு ஒன்றியத்தில் கட்டாலங்குளம் கிராமத்திலும் குமரெட்டியாபுரம், கோவில்பட்டி ஒன்றியத்தில் குலசேகரபுரம், பெருமாள்புரம், படர்ந்தபுளி, ராமச்சந்திரபுரம் உள்பட 6 இடங்களில் நேற்று அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் திறந்து வைத்தார். அவருடன் விழாக்களில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ராகுல், சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பானுமதி, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கூறுகையில்,அய்யனார்ஊத்து கிராமத்திற்கு விரைவில் மினிகிளினிக் இடம் தனியாக கட்டப்படும். இங்கு கால்நடை மருத்துவமனை விரைவில் கட்டப்படும். உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். சாலைகள் மேம்படுத்தப்படும் என தரிவித்தார்.

ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த மாற்று கட்சிகளைச் சேர்ந்த 50 பேர், அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோரை தூத்துக்குடியில் சந்தித்து அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும், வேளாண் விற்பனை குழு உறுப்பினருமான வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் யூனியன் தலைவருமான விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.19 லட்சம் செலவில் கட்டப்பட்ட 100 டன் கொள்ளளவு கொண்ட குடோன் மற்றும் கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு அதிக அளவிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவுத்துறை மூலம் அம்மா நகரும் ரேஷன் கடை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் குறைந்த ரேஷன்கார்டு உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதால், அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வக்குமார், கருங்குளம் யூனியன் தலைவி கோமதி ராஜேந்திரன், துணை தலைவர் லட்சுமண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com