ஜம்பை பகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு

பவானியை அடுத்த ஜம்பை பகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஜம்பை பகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு
Published on

பவானி,

பவானியை அடுத்த ஜம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட தளவாய்ப்பேட்டை, ஒரிச்சேரி, ஒரிச்சேரிபுதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரேஷன் கடைக்கு முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் முக கவசங்களை வழங்கினார். அதுமட்டுமின்றி ஜம்பை பேரூராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடை வீதி, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களிடம் இருந்து கிருமி நாசினி தெளிக்கும் எந்திரத்தை வாங்கி கிருமி நாசினியை தெளித்தார். ஆய்வின்போது கூட்டுறவு வங்கி தலைவர்கள் தட்சிணாமூர்த்தி (சின்னபுலியூர்), துரை (பெரியவடமலைபாளையம்), மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான் உள்பட பலர் இருந்தனர்.

இதேபோல் கவுந்தப்பாடியில் பழனிச்சாமி கவுண்டர் வீதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் வசதிக்காக அந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். மையத்தையும் பார்வையிட்டார். அப்போது அவருடன் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மத்திய வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி உள்பட பலர் இருந்தனர்.

அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் நால் ரோட்டில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்பக்கூடல் நால் ரோடு பகுதிக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தார். பின்னர் அங்குள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர். உடனே அமைச்சர் கே.சி.கருப்பணன் தான் வாங்கி வந்திருந்த முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com