திருச்சியில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் வல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
திருச்சியில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்
Published on

திருச்சி,

ஏழை, எளிய மக்களுக்கு தங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே தலைவலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் பரிசோதனைகள் செய்வதற்கான 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி ஒவ்வாரு மாவட்டத்திலும் அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் திறப்பு

அந்த வகையில் திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெருவில் இருந்த மாநகராட்சி சமூக நல கூடம் தற்போது மருத்துவ வசதிகளுடன் அம்மா கிளினிக் ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ரிப்பன் வெட்டி அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார்.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தையும் வழங்கினார்.

விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.4 லட்சம் உதவி தொகை

இதனை தொடர்ந்து திருச்சி கே. சாத்தனூரில் கடந்த சில நாட்களுக்கு முன் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்த 2 வயது சிறுவன் அரிகிருஷ்ணனின் தந்தை சிவகுமாருக்கு முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com