சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது.

எனவே அந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகை பெற (புதியது மற்றும் புதுப்பித்தல்) மாணவ, மாணவிகள் வருகிற 31-ந்தேதிக்குள் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com