ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீனில் காணாமல் போன சமூக இடைவெளி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீனில் காணாமல் போன சமூக இடைவெளி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது. இந்த கேண்டீன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த கேண்டீன் பூட்டப்பட்டிருந்து. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் நேற்று கேண்டீன் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே கேண்டீன் முன்பு குவிந்தனர். கொரோனா வேகமாக பரவி வரும் நிலையிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றனர்.

டோக்கன் வினியோகம்

இதையறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை வரிசையாக சமூக விலகலை கடைபிடித்து நிற்க அறிவுறுத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அதையும் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். இதனைதொடர்ந்து கேண்டீன் பணியாளர்கள் கூட்டத்தை கலைப்பதற்காக டோக்கன் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த டோக்கனில் பொருட்கள் வாங்க வரும் தேதி, நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் உள்ளபடி பயனாளிகள் பொருட்கள் வாங்க வர வேண்டும் என கேண்டீன் ஊழியர்கள் அறிவுறுத்தினர். முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீனில் திடீரென கூட்டம் அலைமோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com