மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்

மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி குறித்து ‘டுவிட்டரில்’ அவதூறு தாம்பரம் போலீசில் தி.மு.க. புகார்
Published on

தாம்பரம்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரை இழிவுபடுத்தி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதியும், தாம்பரம் நகர 30-வது வட்ட பிரதிநிதியுமான குறிஞ்சி சிவா (வயது 56) என்பவர் இதுதொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலைத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், டுவிட்டர் பக்கத்தில், இந்த ஆட்சியின் அவலங்கள் என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோரை கொச்சைப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் பதிவு செய்து உள்ளனர். இது அவர்கள் இருவரது நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com