எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி வளாகத்தில் ‘காசநோய் இல்லா தமிழகம் - 2025’ எனும் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு
Published on

சென்னை,

2025-ம் ஆண்டுக்கு முன்பாக தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி வளாகத்தில் காசநோய் இல்லா தமிழகம் - 2025 எனும் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், 2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை உருவாக்க வேண்டும் என்று டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2030-க்கு பதிலாக 2025-ம் ஆண்டுக்கு முன்பாகவே காசநோயை தமிழக மக்களிடமிருந்து முற்றிலுமாக ஒழித்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி.சரோஜா, ஆர்.துரைக்கண்ணு, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com